3 மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இணைந்து நகராட்சி கமிஷனர் வீட்டில் நடத்திய சோதனையில் 45 சொத்து ஆவணங்கள் பறிமுதல்.

by Editor / 04-01-2024 11:25:15pm
3 மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இணைந்து நகராட்சி கமிஷனர் வீட்டில் நடத்திய  சோதனையில் 45 சொத்து ஆவணங்கள் பறிமுதல்.

மூன்று மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இணைந்து நகராட்சி கமிஷனர் வீட்டில் நடத்திய சோதனை- 8 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் 45 சொத்து ஆவணங்கள் பறிமுதல்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மற்றும் புளியங்குடி நகராட்சியின் முன்னாள் நகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த பவுன்ராஜ் என்பவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.2 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து, கடந்த 2021-ஆம் வருடம் வால்பாறையில் நகராட்சி கமிஷனராக இருந்தபோது பவுன்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு தற்போது வரை பணியில் சேராமல் உள்ளார்.

இந்த நிலையில், அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து இன்று பவுன்ராஜின் வீடு மற்றும் அவரது தாயான மம்மது என்பவரின் வீடு மற்றும் அவரது தாயின் பெயரில் உள்ள ஜே.எஸ்.ஆர் கார்மெண்ட்ஸ் என்ற நிறுவனம் உள்ளிட்ட 3 இடங்களில் விருதுநகர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சுமார், 8 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையின் போது, சோதனை நடத்தப்பட்ட மூன்று இடங்களில் இருந்து சுமார் 45 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 மேலும், தற்போது கிடைத்துள்ள ஆவணங்களை வைத்து முறையான விசாரணை நடத்தப்படும் எனவும், அதன் பிறகு அது தொடர்பான அறிக்கை அரசுக்கு அளிக்கப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : நடத்திய

Share via