கேரளாவுக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பிடிபட்டது.

by Staff / 23-01-2024 05:15:53pm
 கேரளாவுக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி  பிடிபட்டது.

தமிழகத்தில் இல்லையான தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன இதில் அத்தியாவசிய பொருட்கான பால் முட்டை இறைச்சி அரிசி உள்ளிட்டவைகளும் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன இந்த நிலையில் கேரள மாநிலத்திற்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை நடத்தி வந்தனர் இந்த நிலையில் இன்று காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை சோதனைச் சாவடிகளை தாண்டி ரேஷன் அரிசி கடத்தி ஒரு லாரி செல்வதாக காவல்துறை உதவி ஆய்வாளர் தீபன் குமாருக்கு தகவல் கிடைக்கவே அவர் எஸ் வளைவு தாண்டி தனியார் உணவகம் முன்பு சென்று கொண்டிருந்த ஒரு லாரியை மடக்கி சோதனை செய்த பொழுது அதில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் மூட்டை மூட்டையாக 12 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது உடனடியாக அந்த லாரியை பறிமுதல் செய்த காவல்துறை உதவி ஆய்வாளர் தீபன் குமார் லாரியை ஓட்டி வந்த டிரைவர் கை அக்கா விலை மார்க்கெட் ரோடு புதுவயல் புதன் வீடு பகுதியைச் சார்ந்த முகமது அலி என்பவர் மகன் சாகுல் அமீது என்பவரையும் மற்றும் கேரள மாநிலம் பாற சாலை கோழி விலை பகுதியைச் சார்ந்த முகமது சாதி மகன் பீர்க்கன் என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த லாரி கோவில்பட்டியில் இருந்து ரேஷன் அரிசியை ஏற்றி வந்தது தெரிய வந்தது.
மேலும் லாரியில் ரேஷன் அரிசி கடத்துவது தெரியாமல் இருப்பதற்காக உப்பு மூடைகள் ஏற்றி வந்தது போன்று போலியான பில்களை சோதனை சாவடிகள் கொடுத்து தற்போது தெரிய வந்தது சோதனைச் சாவடிகளில் முறையான சோதனை செய்யப்படாதின் காரணமாக ரேஷன் அரிசி ஏற்றிய லாரி கேரள எல்லைக்குள் நுழையும் முன்புபிடிப்பட்டதும் காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது தொடர்ந்து லாரி ஓட்டுநர் மற்றும் உடன் இருந்தவரிடம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதிக அளவு கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன்  மூடைகள் லாரிகளோடு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் எல்லைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via