புல்டோசர் சர்வாதிகாரம் - அமைச்சர் தங்கராஜ் விமர்சனம்

by Staff / 29-02-2024 12:57:29pm
புல்டோசர் சர்வாதிகாரம் - அமைச்சர் தங்கராஜ் விமர்சனம்

புல்டோசர் சர்வாதிகாரம் இது தான் பாஜக தேசத்திற்கு சொல்லும் செய்தியா என பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்தான தனது எக்ஸ் பக்கத்தில், மணிப்பூரில் கார்கில் போருக்காக உயிர்த்தியாகம் செய்ய முன்வந்த ராணுவ வீரரின் மனைவி பொதுவெளியில் நிர்வாணமாக்கப்பட்டார். உத்தராக்கண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்ட 41 பேரை காப்பாற்றிய நபரின் வீடு டெல்லியில் தரைமட்டமாக்கப்படுகிறது. பாஜகவின் தேச பக்தி என்பது இந்த தேசத்துக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வோரை மதத்தின் பெயரால் வஞ்சிப்பதே. நாட்டுக்கு நன்மை செய்வோரை தண்டிக்காமல் விடாது பாஜக அரசு என்கிறதா இச்செயல்கள் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via