விஜயபாஸ்கர் வீட்டில் 7 மணி நேரமாக நடக்கும் சோதனை

by Staff / 21-03-2024 04:20:40pm
விஜயபாஸ்கர் வீட்டில் 7 மணி நேரமாக நடக்கும் சோதனை

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கரின் சொந்த ஊரான இலுப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த ஏழு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஆர் கே நகர் தேர்தல் பண பட்டுவாடா, குட்கா முறைகேடு போன்ற விவகாரங்களில் அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த புகார்களின் அடிப்படையிலேயே தற்போது அவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது

 

Tags :

Share via