121 பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து....

by Staff / 21-03-2024 05:03:37pm
 121 பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து....

விருதுநகர் மாவட்டம்,விதிமீறல் காரணமாக சிவகாசி மற்றும் சுற்றுபுற பகுதிகளில் இயங்கும் 121 பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் இந்தியாவிற்கான 90 சதவிகிதம் பட்டாசு தயாரிக்கப்படுகிறது. விருதுநகர், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களாக நிகழ்ந்த பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்துகளில் சுமார் 40க்கு மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து  விருதுநகர் மற்றும் சிவகாசி, சாத்துார் பகுதிகளில் விதிகளை மீறி இயங்கும் பட்டாசு தொழிற்சாலை மற்றும் கடைகளைக் கண்காணிக்க வருவாய், காவல், தீயணைப்பு ஆகிய துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழுக்களை மாவட்ட நிர்வாகம் அமைத்த, குழுவினர் பட்டாசு ஆலைகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டு, விதிமுறைகளை மீறி இயங்கும் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை பகுதிகளில் விதிமுறைகளை மீறி இயங்கிய 83 பட்டாசு ஆலைகளில் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 40 நாட்களில் விதிமுறைகளை மீறி இயங்கிய மேலும் 38 பட்டாசு ஆலைகளின் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.

 

Tags :

Share via