பணிகள் நிறைவடைந்ததால் திருப்பூரில் 2-வது ரெயில்வே கேட் திறப்பு

by Admin / 10-08-2021 04:18:24pm
பணிகள் நிறைவடைந்ததால் திருப்பூரில் 2-வது ரெயில்வே கேட் திறப்பு

4-வது நாள் அதிநவீன எந்திரம் கொண்டு தண்டவாளத்தின் கீழ் உள்ள சிலாப்புகளை நகர்த்தி புதிய ஜல்லி நிரப்பி ஒழுங்குபடுத்தும் பணி நடந்தது.

திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டில் உள்ள இரண்டாவது ரெயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக கடந்த 1-ந் தேதி மூடப்பட்டது. 9 நாட்கள் பணி நடைபெறும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து முதல் 2 நாட்கள் தண்டவாளத்தின் கீழ் நிறைந்திருந்த உடைந்த ஜல்லிக்கற்கள், மணல் பொறியியல் குழு ஊழியர் மூலம் அகற்றப்பட்டது. 4-வது நாள் அதிநவீன எந்திரம் கொண்டு தண்டவாளத்தின் கீழ் உள்ள சிலாப்புகளை நகர்த்தி புதிய ஜல்லி நிரப்பி ஒழுங்குபடுத்தும் பணி நடந்தது.
 
3 நாட்கள் நடந்த இப்பணி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. பராமரிப்பு பணியின் போது கழற்றப்பட்ட சிக்னல் அவற்றுக்கான கேபிள் பொருத்தும் பணி இரவிலும் சுறுசுறுப்பாக நடந்தது. இதனால் ஊத்துக்குளியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த ரெயில்கள் குறைவான வேகத்தில் இயக்கப்பட்டன.

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 2-வது ரெயில்வே கேட் மூடப்பட்டு அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. தற்போது பணிகள் நிறைவு பெற்றதால் கேட் திறக்கப்பட்டது.

 

 

Tags :

Share via