இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா 46/0

by Editor / 12-08-2021 06:20:30pm
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா 46/0

2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.

மழையால் முதல் நாள் ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. பிறகு டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்த டெஸ்டிலும் அஸ்வின் தேர்வாகவில்லை. ஷர்துல் தாக்குருக்குப் பதிலாக இஷாந்த் சர்மா தேர்வாகியுள்ளார். இங்கிலாந்து அணியில் ஹசீப் ஹமீத், மொயீன் அலி, மார்க் வுட் இடம்பெற்றுள்ளார்கள்.

ஆரம்பம் முதல் இங்கிலாந்துப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசியதால் முதல் 12 ஓவர்களில் ரோஹித் சர்மாவும் ராகுலும் இணைந்து 14 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். அறிமுக ஓவர்களைப் பாதுகாப்பாகத் தாண்டியதால் ஓரளவு அடிக்க ஆரம்பித்தார் ரோஹித் சர்மா. சாம் கரண் வீசிய 15-வது ஓவரில் நான்கு பவுண்டரிகளை அடித்து அசத்தினார். 19-வது ஓவரின்போது மீண்டும் மழை பெய்ததால் அனைவரும் ஓய்வறைக்குத் திரும்பினார்கள். அப்படியே உணவு இடைவேளையை நடுவர்கள் அறிவித்தார்கள்.

முதல் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி, 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 35, ராகுல் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள்.

 

Tags :

Share via