இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல்-அவுட்

by Editor / 25-08-2021 08:01:27pm
இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல்-அவுட்

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட
டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி, லீட்சில் உள்ள
ஹெட்டிங்லே மைதானத்தில் இன்று(25ம் தேதி) தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் எந்த மாற்றமும் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கும் ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

 

Tags :

Share via