மதுரை அரசு மருத்துவமனை கரோனா வார்டுகளில் எலிகள் அட்டகாசம் தவிக்கும் நோயாளிகள்

by Editor / 20-04-2021 09:22:34am
மதுரை அரசு மருத்துவமனை கரோனா வார்டுகளில் எலிகள் அட்டகாசம் தவிக்கும் நோயாளிகள்

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு அரசு  மருத்துவமனை, திருமங்கலம், மேலூர், வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைகள், ரயில்வே, இஎஸ்ஐ மருத்துவமனைகள் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக மையம் ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இம்மருத்துவமனைகளில் தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
எந்த நேரத்திலும் கொரோனாவின் 2-வது அலையால் பாதிப்பு ஏற்படலாம் என்பதால்  மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் தொடர்ந்து இயங்கியது. இந்நிலையில், மதுரையில் கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. தினமும் 200-க்கும் மேற்பட்டோர் இத்தொற்றால் பாதிக்கப்படுவதால்  மருத்துவமனையில் 450-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் நிரம்பி வழிவதால் நோயாளிகள் தற்போது மதுரை அரசு மருத்துவமனைக்குப் படையெடுக்கின்றனர்.
அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை வார்டுகளில் கடந்த சில வாரங்களாக எலிகள் தொல்லை அதிகரித்துள்ளது. ஏற்கெனவே கொசுக் கடி, புழுக்கத்தால் கொரோனா தொற்றுடன் போராடும் நோயாளிகள், தற்போது எலிகளுடனும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு எலிகள் நோயாளிகளின் கை, கால்களைக் கடிக்கத் தொடங்கியுள்ளதால் அவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து நோயாளிகள் கூறுகையில், ''கடந்த சில நாட்களுக்கு முன் சர்க்கரை நோயால் காலில் பாதிப்பு ஏற்பட்ட ஒரு நோயாளி சிகிச்சைக்கு வந்தார். கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரது காலில் இருந்த காயத்தில் எலி கடித்துவிட்டது. வலியால் துடித்த அவர் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கும் மறுநாள் ஏற்கெனவே கடித்த காலிலேயே எலி கடித்தது. பாதிக்கப்பட்ட அந்த நோயாளியும், மற்றவர்களும் பணியில் இருந்த செவிலியரிடம் புகார் செய்தனர். நோயாளிகளைக் கடிக்கும் எலிகளை அழிக்க மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினர்.

Tags :

Share via