பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்

by Staff / 03-07-2023 04:13:24pm
பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியாக போட்டியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பெங்களூருவில் ஜூலை 17,18 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். மேலும், மேகதாது விவகாரத்தால் பெங்களூருவில் நடக்கும் கூட்டத்தை மாற்ற திமுக வலியுறுத்தியதாக தகவல் வெளியான நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் கடந்த 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 

Tags :

Share via