பாமகவை அடுத்து கூட்டணியில் இருந்து வெளியே வந்த தேமுதிக

by Editor / 15-09-2021 02:56:29pm
பாமகவை அடுத்து கூட்டணியில் இருந்து வெளியே வந்த தேமுதிக

தமிழகத்தில் 9 ஊராட்சி ஒன்றியத்திற்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக ஊராட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே.

இந்த தேர்தலை சந்திக்க அதிமுக, திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியும் உடைந்து வருகிறது

குறிப்பாக அதிமுக கூட்டணியில் இருந்த முக்கிய கட்சியான பாமக அந்த கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. கூட்டணி மாண்பை அதிமுக பின்பற்றவில்லை என்றும் அதனால் பாமக தனித்து போட்டியிடுவது வாங்கும் அக்கட்சியின் தலைவர் ஜிகே மணி அவர்கள் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் பாமகவை அடுத்து தேமுதிகவும் கூட்டணியிலிருந்து வெளியே வந்து உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த தேமுதிக தற்போது அந்த கூட்டணியில் இருந்து வெளியே வந்து இருப்பதாகவும் வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் உள்ளாட்சித் தேர்தல் நெருங்க நெருங்க எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இருந்து விலக இருக்கின்றன

 

Tags :

Share via