கன்னி

by Admin / 17-11-2018
கன்னி

11.11.18 முதல் 17.11.18 வரை

கன்னி

சிந்தனையில் மாற்றம் இருக்கும். எதிர்கால முன்னேற்றம் பற்றிய எண்ணங்கள் சதா மனதை ஆக்கிரமிக்கும். எதற்கும் உரிய கவுரவம் எதிர்பார்ப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் இணைந்திருக்கும். வரவு சிறப்பாகி சேமிப்பு உயர்வடையும். புதிய சொத்துக்கள் சேரும். தங்க, வெள்ளி பொருட்கள் வாங்க கால நேரம் கூடி வரும். குடும்பத்தோடு உல்லாசப் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் செயல்களைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கு உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். பணிக்குச் செல்வோர் அலுவல் கோப்புகளை கையாளும்போது அதிக கவனம் அவசியம். கலைத்துறையினர் தனலாபம் காண்பர். மாணவர்கள் மொழிப்பாடத்தில் நல்ல முன்னேற்றம் காண்பர். நற்பலனைத் தரும் வாரம் இது. வழிபாடு: அனுமந்தராயனை வழிபடவும்.