தனுசு

by Admin / 17-11-2018
தனுசு

11.11.18 முதல் 17.11.18 வரை

தனுசு

செலவுகள் கூடும். குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காகக் கூடுதலாக செலவழிப்பீர்கள். சேமிப்பு துணையிருப்பதால் செலவுகளைப் பற்றி கவலை இல்லை. எடுத்த காரியங்கள் எளிதில் முடிவடையாமல் சற்று இழுபறி தரலாம். ஆயினும் நிதானமான அணுகுமுறை தேவை. குடும்பத்தினரோடு உல்லாசப் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் செயல்கள் குடும்பப் பெருமையை உயர்த்தும். சம்பந்தமில்லாத பணிகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதால் உடல்நிலையில் தொய்வு உண்டாகலாம். வாழ்க்கைத்துணையின் செயல்வேகத்தோடு ஈடுகொடுப்பதில் தடுமாற்றம் காண்பீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த குடும்பப் பிரச்னை முடிவிற்கு வரும். வேலைக்குச் செல்வோருக்கு முக்கியமான அலுவல் கோப்புகளைக் கையாளுவதில் கவனம் தேவை. கலைத்துறையினர் எதிர்பார்த்த தனலாபம் வந்து சேரும். மாணவர்கள் கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் நல்ல முன்னேற்றம் காண்பர். மகிழ்ச்சி தரும் வாரம் இது. வழிபாடு: கோபால கிருஷ்ணனை வழிபடுங்கள்.