கேரளாவில் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

by Admin / 28-11-2021 12:36:08am
கேரளாவில் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

 

கேரளாவில் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
  
கேரளாவில் வடகிழக்கு பருவமழை மாநிலம் முழுவதும் தொடர்ந்து பெய்து வருவதால் பம்பை நதி உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அணைகளும் நிரம்பி உள்ளன. திருவனந்தபுரம் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் நேற்றும் விட்டு விட்டு மழை பெய்தது. இன்று திருவனந்தபுரம், கொல்லம், மலப்புரம் உள்பட 12 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும். இதனால் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும்  காசர்கோடு தவிர மாநிலத்தில் உள்ள பிற 13 மாவட்டங்களிலும் மிக பலத்த மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் மழைகேரளாவில் வருகிற 2-ந்தேதி முதல் மழை குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகங்கள்,  மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via