கொரோனா சிகிச்சை முடிந்து  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டிஸ்சார்ஜ்

by Editor / 01-05-2021 06:43:18pm
கொரோனா சிகிச்சை முடிந்து  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டிஸ்சார்ஜ் 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன், கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 72. இவர், தி.மு.க., - காங்., கூட்டணியை ஆதரித்து, சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட, தன் மகனுக்காகவும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஓட்டுப்பதிவு முடிந்த பின், கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்று வந்த அவருக்கு, காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில், அவருக்கு அளிக்கப்பட்டசிகிச்சை நிறைவு பெற்றதை அடுத்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யபட்டு வீடு திரும்பியுள்ளார்

 

Tags :

Share via