2022ஐ மிரட்ட வருகிறது அதிதீவிர டெல்மைக்ரான்

by Admin / 24-12-2021 02:21:39pm
2022ஐ மிரட்ட வருகிறது அதிதீவிர டெல்மைக்ரான்

 
கொரோனாவின் தாக்கத்திலிருந்து வெளியே வருவதற்குள் டெல்டா உருவாகி அடுத்த அலையை ஏற்படுத்தி, அதிலிருந்து மீள்வதற்குள் ஒமைக்ரான் வந்து, 2022ஆம் ஆண்டை மிரட்ட வருகிறது டெல்மைக்ரான் என்ற புதிய வில்லன். 

உருமாறிய டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ்களின் கூட்டுச் சேர்க்கையே டெல்மைக்ரான். இது ஒமைக்ரானை விட அதிதீவிரமாகப் பரவும் தன்மை கொண்டிருக்கிறது.

இதுவரை கரோனா வைரஸ்களால் ஏற்பட்டு வந்த அலைகளையே உலகம் தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்த நிலையில், டெல்மைக்ரானால் சுனாமி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவது,

 2022ஆம் ஆண்டின் மீதான சிறுதுளி நம்பிக்கையையும் தவிடுபொடியாக்கியுள்ளது. டெல்டா வகை கரோனா நாட்டில் பரவலாக பரவியிருந்த நிலையில், தற்போது உலகம் முழுக்க ஒமைக்ரான் அதிகளவில் பரவி வருகிறது.

ஒமைக்ரான் தொற்று முதல்முறையாக தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. இது பல மடங்கு உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸாகவும், இது அதிதீவிரமாக பரவும் தன்மை கொண்டிருப்பதாகவும் அதே வேளையில், டெல்டா வகை கரோனாவை விடவும், இது குறைந்த பாதிப்பையே ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டது.
 
ஒமைக்ரான் பாதித்தவர்களில் பலி எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.
ஆனால், தற்போது டெல்டா மற்றும் ஒமைக்ரானின் கூட்டுச்சேர்க்கையான டெல்மைக்ரான் இரண்டு வைரஸ்களின் அமைப்பையும் ஒருங்கே பெற்றுள்ளது. 

இதையடுத்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்துவதிலும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கூடுதல் தவணைகளை செலுத்தவும் நாடுகள் தீவிரம்காட்ட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதானோம் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 88 பேரும், டெல்லியில் 67 பேரும், தெலங்கானாவில் 38 பேரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 34 பேரும், கர்நாடகத்தில் 31 பேரும், குஜராத்தில் 30 பேரும், கேரளத்தில் 27 பேரும், ராஜஸ்தானில் 22 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 

 

Tags :

Share via