மும்பையிலிருந்து 2 லட்சம் கோவிஷீல்டு  தடுப்பூசிகள் தமிழகம் வந்தன

by Editor / 04-05-2021 05:52:26pm
 மும்பையிலிருந்து 2 லட்சம் கோவிஷீல்டு  தடுப்பூசிகள் தமிழகம் வந்தன

 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவீஷீல்டு தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர்  ஊசி மருந்து வழங்கப்படுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசிகளான கோவாக்சின், கோவிஷில்டு ஆகியவற்றுக்கு ஒருசில இடங்களில் தடுப்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 18 வயது முதல் 45 வயது வரையிலானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில்  மும்பையிலிருந்து இருந்து இண்டிகோ விமானம் மூலம் 2 லட்சம்  டோஸ்  கோவீஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.
தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னைமாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு அவை எடுத்து செல்லப்படுகின்றன.
பின்னர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via