ஆயுர்வேத போலி மருந்துகள் பிடிபட்டது.

by Editor / 05-07-2019 01:37:43pm
ஆயுர்வேத  போலி மருந்துகள் பிடிபட்டது.

ஒரு பிரபல தனியார் ஆயுர்வேத மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போலி மருந்துகள் பிடிபட்டது.

ஆயுர்வேத  போலி மருந்துகள் பிடிபட்டது.

தமிழ்நாட்டில் வசிக்கும் ஏராளமானோர் மருத்துவ சிகிச்சைக்காக தமிழக-கேரள எல்லையான கேரள மாநிலம் புனலூர் பகுதியில் உள்ள கோட்டைக்கள் என்கின்ற பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் ஆயுர்வேத மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு செல்வது வழக்கம் .தினமும் ஏராளமானோர் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தமிழகத்தில் இருந்து சென்று வந்த வண்ணம் உள்ளனர். மிகவும் புகழ்பெற்ற இந்த மருத்துவமனைக்கு தமிழகத்தில் இருந்து முறையான மருத்துவ சோதனைகள் உள்ளிட்டவைகள் செய்யப்படாத போலி கேப்சூல்,மருந்து பொடிகள், ஆயுர்வேத சம்பந்தப்பட்ட மருத்துவ குணம் வாய்ந்த மரங்களில் தோடுகல் எனப் படும் பட்டைகள் உள்ளிட்டவைகள் இன்று அதிகாலை நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் இருந்து ஒரு காரில் புனலூர் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் பிள்ளை என்பவருடைய மகன் ரினேஷ் என்பவர் ஒருகாரில் எடுத்து கொண்டு புளியரை வழியாக சென்றார். அப்பொழுது கேரள மாநிலம் ஆரியங்காவில் உள்ள மதுவிலக்கு சோதனைச் சாவடியில் ஆய்வாளர் ஷா நவாஸ் தலைமையில் போலீசார் அந்த காரை மறித்து சோதனை செய்ததில் அந்த காரில் முறையான அனுமதி கள் இல்லாமல் அந்த மருத்துவமனைக்கு சாக்கு மூட்டைகளில் அவர்களின் மறைந்து 15 கிலோ மருந்து பொடிகள்,ஐந்தரை கிலோ எடை கொண்ட காலி கேப்ஸுல்களையும்,7.5. கிலோ மருந்துகள் உள்ளிட்டவை அந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த பொருட்கள் அனைத்தும் செங்கோட்டை காலங்கரை பகுதியில் இருந்து வாங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து மதுவிலக்கு சோதனைச் சாவடி போலீசார் பிடிப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுர்வேதம் மருத்துவம் என்கின்ற பெயரில் தமிழக மக்கள் கேரளாவை நோக்கி படையெடுத்து வரும் நிலையில் போலியான மருந்துகள் மூலம் தமிழக மக்களுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது இப்பொழுது இந்த போலி மருந்துகள் பிடிப்பட்டதன் மூலம் தெரியவந்துள்ளது. தமிழக காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து தமிழகத்தில் இயங்கும் இதுபோன்ற கேரள மாநிலத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைகளில் ஆயுர்வேத வைத்திய சாலைகளில் சோதனை நடத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

Share via