வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்வு

by Staff / 16-06-2022 11:34:33am
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்வு

புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான டெபாசிட் தொகை 750 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டரை பெறுவதற்கு டெபாசிட் தொகை ஆயிரத்து 450 ரூபாய் என்று இருந்த நிலையில் இனி 2,700 ரூபாய் செலுத்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதே போன்று இரு சிலிண்டர்களுக்கான இணைப்பு பெற 4400 ரூபாய் செலுத்த வேண்டும் 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டருக்கான டெபாசிட் தொகை 800 ரூபாயில் இருந்து ஆயிரத்து 150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எரிவாயு சிலிண்டரின் விலை 150 ரூபாயிலிருந்து 250 ரூபாய் அதிகரிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via