கனமழை:முக்கிய நீர் தேக்கங்களில் உபரி நீர் திறப்பு.

by Editor / 09-12-2022 03:10:55pm
கனமழை:முக்கிய நீர் தேக்கங்களில் உபரி நீர் திறப்பு.

மாண்டஸ் புயல் காரணமாக தற்போது பெய்து வரும் கனமழையால் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் புழல், பூண்டி, உள்ளிட்ட நீர் தேக்கங்களில் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 100 கன அடி முதல் கட்டமாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி உள்ளிட்ட நீர் தேக்கங்களில் திறக்கப்பட்ட உபரி நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தாழ்வான் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மேலும், நீர்வரத்து அதிகரிப்பைப் பொறுத்துக் கூடுதலாக உபரிநீர் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது புழல் நீர் தேக்கம் 21 . 20 அடியில் சுமார் 17 அடி எட்டி வேகமாக நிரம்பி வருகிறது. அத்துடன், பூண்டி நீர் தேக்கம் 35 அடியில் தற்போது 33 அடியை எட்டி வேகமாக நிரம்பி வருகிறது. மேலும், செம்பரம்பாக்கம் அதன் மொத்த அடி 24 அடியில் தற்போது 20. 38 அடி நெருங்கியுள்ளது.

பலத்த காற்று வீசுவது நின்ற நிலையிலும் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. ஒலிபெருக்கி மூலம் வருவாய்த் துறையினர், பாதுகாப்பாக இருக்கவும் வீட்டிலேயே தங்கவும் மீனவர்கள் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தவும் உபரிநீர் செல்லும் தாழ்வான பகுதிகளுக்குச் செல்லக்கூடாது எனவும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via