கேஸ் சிலிண்டர் விலை ரூ.3,141

by Staff / 18-02-2023 11:43:28am
கேஸ் சிலிண்டர் விலை ரூ.3,141

கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், கேஸ் சிலிண்டர் விலையை 3,141 ரூபாயாக உயர்த்தியுள்ளது. மேலும் பெட்ரோல் ரூ.272 ஆகவும், டீசல் ரூ.280 ஆகவும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ அரிசி ரூ.200-க்கு விற்கப்படுகிறது. பால் விலையும் உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்து வருவதால் வரும் நாட்களில் இந்த விலைகள் மேலும் உயரக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இலங்கை, பாகிஸ்தானை தொடர்ந்து இந்த பட்டியலில் நேபாளமும் சேரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அந்த நாட்டில் பணவீக்கம் தற்போது 8 சதவீதத்தை எட்டியுள்ளது.

 

Tags :

Share via