ஜூனியர் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

by Staff / 13-07-2023 03:58:08pm
ஜூனியர் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் ஊதிய உயர்வு தராததற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் உள்ள ஜூனியர் மருத்துவர்கள் இன்று தங்களது காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கி ஜூலை 18 செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு இந்த போராட்டம் முடிவடையும். ஜூனியர் டாக்டர்கள் சங்கமான பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் அதிகாரிகள், ஐந்து நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர். இது பற்றி அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. 35% ஊதிய உயர்வுக்கான ஜுனியர் மருத்துவர்களின் கோரிக்கை நியாயமற்றது என்றும், வேலைநிறுத்தம் நோயாளிகளின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் சுகாதார செயலாளர் ஸ்டீவ் பார்க்லே கூறினார்.
 

Tags :

Share via