மோடி அமித் ஷாவை அவதூறாக பேசிய கண்ணனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது

by Editor / 11-01-2020 01:20:46pm
மோடி அமித் ஷாவை அவதூறாக பேசிய கண்ணனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது

நெல்லை, மேலப்பாளையத்தில் டிசம்பர் மாதம் 29-ந்தேதி எஸ்டிபிஐ கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பேச்சாளர் நெல்லை கண்ணன் அப்போது அவர் பிரதமர் மோடி , உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை அவதூறாக பேசியதாக பாஜக கட்சியினர் கொடுத்த புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீசார் நெல்லை கண்ணன் மீது குற்ற சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் சிறை வைக்கப்பட்டார்.

இந்த வழக்கு நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது விசாரணை முடிவில் ஜாமின் கேட்டுக் கொண்டதற்கிணங்க கண்ணனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து பேச்சாளர் கண்ணன் சேலம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஜாமின் முடிவடையும் நாள் வரை தினமும் மேலப்பாளையத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் காலையிலும் மாலையிலும் நேரில் வந்து கையெழுத்திட வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது

 

Share via