சென்னைக்கு தனிவாகனத்தில் செல்லும் விஜயகாந்த் குடும்பத்தினர்.

by Editor / 28-12-2023 02:57:01pm
சென்னைக்கு தனிவாகனத்தில் செல்லும் விஜயகாந்த் குடும்பத்தினர்.

தேசிய முற்போக்கு  திராவிட கழகத்தின் தலைவர், மறைந்த  விஜயகாந்த் வசித்த பூர்வீக வீடு மதுரை மேலமாசி வீதி  சௌராஷ்ட்ரா சந்து பகுதியில் அமைந்துள்ளது. அங்கு அவரது உடன் பிறந்த தம்பி செல்வராஜ், தனது மனைவி மீனாட்சி  மற்றும் குடும்பத்தினருடன் வசித்து  வருகிறார்.இன்று தனது சகோதரர் மரணச் செய்தி கேள்வியுற்ற அவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் விஜயகாந்த் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள தனி வாகனத்தில்  சென்னைப் புறப்பட்டுச் சென்றனர்.

 

Tags : சென்னைக்கு தனிவாகனத்தில் செல்லும் விஜயகாந்த் குடும்பத்தினர்.

Share via