டாஸ்மாக் - 3 நாட்கள் விடுமுறை

by Staff / 13-01-2024 12:29:16pm
டாஸ்மாக் - 3 நாட்கள் விடுமுறை

சென்னையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருவள்ளுவர் தினமான ஜன.16, வடலூர் ராமலிங்கர் நினைவு தினமான ஜன.25, குடியரசு தினமான ஜன .26 ஆகிய 3 தினங்களும், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதை சார்ந்த பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via