பழங்குடியின பெண் நீதிபதிக்கு முதலமைச்சர் பாராட்டு

by Staff / 13-02-2024 02:23:23pm
பழங்குடியின பெண் நீதிபதிக்கு முதலமைச்சர் பாராட்டு

பழங்குடி பெண்ணான ஸ்ரீபதி 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளதற்கு முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், திராவிட மாடல் அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்.


 

 

Tags :

Share via