தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரன்

by Staff / 23-03-2024 02:52:42pm
தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரன்

வருகின்ற மக்களவைத் தேர்தலில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வருகின்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் அமமுக இடம்வகித்துள்ளது. அமமுக கட்சிக்கு பாஜக இரண்டு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தேனியில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்கள் சந்திப்பின்போது, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை தேனி தொகுதியில் போட்டியிடுமாறு நான் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவர் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார் என கூறிள்ளார்.

 

Tags :

Share via