குஷ்புவுக்கு உடல்நலக்குறைவு - பாஜக தலைமைக்கு கடிதம்

by Staff / 07-04-2024 01:18:25pm
குஷ்புவுக்கு உடல்நலக்குறைவு - பாஜக தலைமைக்கு கடிதம்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகையும், பாஜகவின் செயற்குழு உறுப்பினருமான குஷ்பு தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தனது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவர்களின் அறிவுரைப்படி பிரச்சாரங்களில் பங்கேற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via