முககவசம் அணியாததற்கு 100 ரூபாய் அபராதம் கட்ட சொன்ன அதிகாரியை ஓட்டல் ஊழியர்கள் மூன்று பேர் சேர்ந்து தாக்கிய சம்பவம்

by Editor / 16-05-2020 01:06:46pm
முககவசம் அணியாததற்கு 100 ரூபாய் அபராதம் கட்ட சொன்ன அதிகாரியை ஓட்டல் ஊழியர்கள் மூன்று பேர் சேர்ந்து தாக்கிய சம்பவம்

புதுச்சேரியில்  முககவசம் அணியாததற்கு 100 ரூபாய் அபராதம் கட்ட சொன்ன அதிகாரியை ஓட்டல் ஊழியர்கள் மூன்று பேர் சேர்ந்து, ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளை வழங்கியதை தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்தில் கடந்த வாரம் முதல்  ஓட்டல்கள், கடைகளை பல்வேறு நிபந்தனைகளுடன் திறக்க புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியுள்ளது. இங்கு வேலை செய்பவர்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அணியாதவர்களிடம் ரூ.100 அபராதம் வசூலிக்கும் அதிகாரம் நகராட்சிக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி காந்திவீதியில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலில் ஊழியர்கள் முக கவசம் அணியாமல் பணிபுரிந்தது தெரியவந்தது. உடனே நகராட்சி அதிகாரிகள், அந்த நபர்களை எச்சரித்து, அபராதம் செலுத்தும்படி கூறினர். ஆனால் ஓட்டல் ஊழியர்கள் அபராதம் செலுத்த மறுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஓட்டலில் பணிபுரிந்த மூன்று பேர் அபராதம் கேட்ட நகராட்சி என்றனர்.ிகளை திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் இதுகுறித்து பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு ஓட்டல் ஊழியர்கள் மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share via