நாளை வெளியாகிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

by Staff / 04-04-2024 04:02:54pm
நாளை வெளியாகிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் தேர்தலுக்கான அறிக்கைகளை தயாரிக்கும் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே ஒரு குழு அமைத்துள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை(ஏப்ரல் 5) காலை 11:30 மணியளவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் அறிக்கையில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கான முக்கிய வாக்குறுதிகள் மற்றும் இலவச திட்டங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via