இஸ்ரேலில் இருந்து 2வது விமானம் டெல்லி வந்தது

by Staff / 14-10-2023 12:29:00pm
இஸ்ரேலில் இருந்து 2வது விமானம் டெல்லி வந்தது

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே 7-வது நாளாக உச்சக்கட்ட போர் நாள் தீவிரமடைந்து வருகின்றன. காஸாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், அந்நகரை விமானம் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலில் இருந்து 235 இந்தியர்களுடன் 2வது விமானம் டெல்லி வந்தடைந்தது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 பேர் உள்ளனர். முதல் விமானத்தில் 212 பேர் அழைத்து வரப்பட்டனர். ஆபரேஷன் அஜய் என்ற பெயரில் இஸ்ரேலில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via