தாய் மண்ணே வணக்கம்-குமரிமாவட்டத்திற்கு நவம்பர் 1ம் தேதி விடுமுறை

by Editor / 27-10-2022 07:56:18pm
தாய் மண்ணே வணக்கம்-குமரிமாவட்டத்திற்கு  நவம்பர் 1ம் தேதி விடுமுறை

தாய் தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த தினமான வரும் நவம்பர் 1ம் தேதி  குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்,மேலும் நவம்பர் 1ம் தேதிக்கு  அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக நவம்பர் இரண்டாவது சனிக்கிழமை 12-11-2022 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தின் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாள் எனவும் மாவட்ட ஆட்சியர்அரவிந்த் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via