மேஷம்
நவம்பர் 7, 2025
குடும்ப நபர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். வேலையாட்களிடம் ஒத்துழைப்புகள் கிடைக்கும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எதிர்காலம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். கீர்த்தி நிறைந்த நாள்.