டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் குற்றமற்றவர்என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு .

by Admin / 27-02-2026 11:50:03am
டெல்லி மதுபான கொள்கை  ஊழல் வழக்கிலிருந்து  அரவிந்த் கெஜ்ரிவால் குற்றமற்றவர்என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு .

டெல்லி மதுபான கொள்கை தொடர்பான ஊழல் வழக்கிலிருந்து ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றமற்றவர் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

சி.பி.ஐ தாக்கல் செய்த குற்ற பத்திரிக்கையில் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் எந்த ஒரு குற்றச்சதியோ அல்லது முறைகேடு  நடந்ததற்கான முகாந்திரம் இல்லை என்றும் கூறி கெஜ்ரிவால் மற்றும் சிசோடியா உள்ளிட்ட 23 பேரையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த ரவுஸ் அவன்யூ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஜிஜேந்திர சிங் சிபிஐயின் விசாரணை அறிக்கையில், பல குளறுபடிகள் இருப்பதாகவும் எந்த ஒரு சாட்சியும் இன்றி கெஜ்ரிவால் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் கடுமையாக சாடி உள்ளார். தீர்ப்பிற்கு பிறகு நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளரிடம் பேசிய கெஜ்ரிவால் கண்ணீர் மல்க , நாங்கள் நேர்மையானவர்கள். இறுதியில் உண்மையை இறைவன் வெல்லச் செய்திருக்கிறார் என்று தெரிவித்தார். 2021- 2022 ஆம் ஆண்டுக்கான டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறி 2024 மார்ச் மாதம் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சுமார் ஐந்து மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்தார் .பின்னர் ஜாமினில் வெளிவந்த நிலையில் இன்று அவர் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo