நாகை எம்.பி. மறைவு - கமல்ஹாசன் இரங்கல்

by Staff / 13-05-2024 03:58:44pm
நாகை எம்.பி. மறைவு - கமல்ஹாசன் இரங்கல்

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினருமான எம். செல்வராஜ் இன்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவையொட்டி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தோழர் எம். செல்வராஜ் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலமாக மக்கள் பணி செய்துவந்த தோழரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via