உலக நாயகனை உருட்டிய 8வயது இரட்டை சிறுமிகளின் அதிரடி கேள்விகணைகள்

மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர் கலை கட்டி வருகிறது. மூன்று சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். போட்டியில் இடையிடையே விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட சர்வதேச பிரபலங்களுடன் கேள்வி நேரத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைப்பது வழக்கமானது.
இதன் தொடர்ச்சியாக ஐந்து முறை உலக சாம்பியன் ஆன விஸ்வநாதன் ஆனந்திடம் கேள்வி கேட்கும் வாய்ப்பு நேற்று 8 வயது இரட்டை சிறுமிகளுக்கு கிடைத்தது.அவர்கள் கேள்வி ஒன்றை எழுப்பினர். தற்பொழுது அந்த கேள்வி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
கேள்வி நேர தருணத்தின் போது, இரட்டை சிறுமிகளில் ஒருவர் காயின்களை எப்படி மறுபடியும் reset செய்வது என்று கேள்வி கேட்டனர். அதற்கு விஸ்வநாதன் ஆனந்த் பதிலளிக்க தொடங்கிய போது, அந்த சிறுமி காயின்களை வைத்து எதிரணி வீரரை திசை திருப்புவது எப்படி என்று கேள்வி எழுப்பினார். ஆனந்த் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் “ have no idea” என்று கூறி மகிழ்ச்சி சிரிப்பை வெளிப்படுத்தினார்.
மேலும் இதனை தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், இன்றைய தினத்திற்கான கேள்வி என்றும் பதிவிட்டுள்ளார். உலக சாம்பியனையே தங்களுடைய கேள்விகளால் திணற வைத்த இந்த இரட்டை சிறுமிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றனர்.

Tags : 8-year-old twin girls who beat the world champion action questions