அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்கிற பெயரை அறிவித்தார் ,வி .கே .சசிகலா.

by Admin / 13-03-2026 01:09:24pm
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்கிற பெயரை அறிவித்தார் ,வி .கே .சசிகலா.

 போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது, திமுக என்கிற தீய சக்தியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக கடந்த மாதம் கொடியை அறிமுகம் செய்து வைத்து இப்பொழுது கட்சியின் பெயரை அறிவிக்கிறேன்.. அனைவரும்  மீதும் அம்மா மீதும் கொண்ட பற்றின் காரணமாக இந்த கட்சியை ஆரம்பித்து இருப்பதாக தெரிவித்த அவர் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்கிற பெயரை  வி .கே .சசிகலா அறிவித்தார்.. கட்சியின் சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ள தென்னந்தோப்பு  சின்ன பதாகையை தூக்கி காட்டி அறிமுகம் படுத்தினார். நாங்கள் எப்பொழுதுமே ஒற்றுமையை விரும்புகிறவர்கள் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த சின்னம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.. மக்களோடு இருப்பேன் என்றும்…கூட்டணி வைப்பீர்களா என்றதற்கு நாங்கள் கூட்டணியோடு தான் செயல்படுவோம் என்றும் சில பேர் தனித்து இயங்க வேண்டும் என்பார்கள்  நாங்கள் அப்படி அல்ல..தனி மரம் தோப்பாகாது .அதனால் நாங்கள் தனி மரமாக வரவில்லை.எடப்பாடி பழனிச்சாமி தனித்து செயல்படுவதை 2026 சட்டமன்றத் தேர்தல் தெளிவுபடுத்திவிடும். என்றும் விஜய்யோட கூட்டணி அமைப்பீர்களா என்கிற கேள்விக்கும் எல்லாரோடும் இணைந்து செயல்படுவோம் என்கிற மாதிரியான கருத்தை வெளியிட்டார் . மக்களுக்கான கட்சியாக நாங்கள் செயல்படுவோம் என்று தெரிவித்தார்.
 

 

Tags :

Share via