வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விநியோகம் மற்றும் முன்பதிவு முறையில் புதிய விதிமுறை

by Admin / 30-04-2026 12:08:13pm
வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விநியோகம் மற்றும் முன்பதிவு முறையில் புதிய விதிமுறை

நாளை மே ஒன்றாம் தேதியில் இருந்து வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விநியோகம் மற்றும் முன்பதிவு முறையில் புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. ஒரு சிலிண்டர் முன்வைத்து செய்த பிறகு அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான கால வரம்பு மாற்றப்பட்டுள்ளது நகர்ப்புறங்களில் 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது கிராமப்புறங்களில் 45 நாட்கள் வரை கால இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் நினைவகத்தின் போது வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும், ஒருமுறை கடவுச்சொல்லை கட்டாயம் பகிர வேண்டும் என்றும் இதன் மூலம் சரியான நபருக்கு சிலிண்டர் சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் மானியம் பெறுபவர்கள் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடிக்க வேண்டும் என்றும் இதை செய்ய தவறினால் மானியம் அல்லது விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு வைத்திருக்கும் வீடுகளில் மூன்று மாதங்களுக்குள் எல்..பிஜி இணைப்பை திரும்ப ஒப்படைக்காவிட்டால் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கை செய்து உள்ளது.

 

வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விநியோகம் மற்றும் முன்பதிவு முறையில் புதிய விதிமுறை
 

Tags :

Share via
Logo