நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தலைமையில் 50 பேர் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

by Editor / 28-11-2024 04:46:47pm
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தலைமையில்  50 பேர் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 2009 முதல் 2021 வரை நாதகவின் நாமக்கல் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்த வினோத்குமார் தலைமையில் விவசாய அணி, இளைஞர் பாசறை மற்றும் மோகனூர் நகர செயலாளர், மகளிர் பாசறை செயலாளர் உள்ளிட்ட 50 பேர் கட்சியின் கொள்கை முரண்பாடு காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளனர். மேலும், சீமான் நிர்வாகிகளை தொடர்ந்து அவமரியாதை செய்து வருவதாக வினோத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

 

Tags : நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தலைமையில் 50 பேர் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

Share via

More stories