இன்று பிரதமர் நரேந்திர மோடி திருச்சி தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றயுள்ளார்
இன்று பிரதமர் நரேந்திர மோடி 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு திருச்சி பஞ்சப்பூரில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மாலை ஐந்து மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருச்சி வந்து சேர்கிறார். மாலை 6:30 மணி அளவில் நடைபெறும் பொது கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். கூட்டத்திற்கு முன்னதாக சுமார் 5650 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். இக்கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அ மு க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமரின் வருகையையொட்டி திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை வரை ட்ரோன்கள் இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags :



















