வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையிலோ புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை -எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
தமிழக வெற்றிக்கழக அரசின் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தது .இந்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனங்களை முன் வைத்தார். கலந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு மக்கள் நல திட்டங்களுக்கு தமிழக வெற்றிக்கனக அரசு வெறும் பெயர்களை மட்டும் மாற்றி புதிய திட்டங்கள் போல் அறிவித்துள்ளதாகவும் மடிக்கணினி வீடு வழங்க திட்டங்கள் உள்ளிட்ட முந்தைய திட்டங்களின் பெயர்களை மாற்றுவதற்காகவா அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார் என்று கேள்வி எழுப்பியதோடு இந்த முதல் வேளாண் பட்ஜெட்டில் உருப்படியாகவோ விவசாயிகளுக்கு பயன்படும் வகையிலோ புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டதோடு இதனை ஒரு பிக் ஜீரோ பட்ஜெட் என்றும் மரபுகளை மீறி முதலமைச்சரை புகழ்வதற்காகவே இந்த நேரம் பயன்படுத்தப்பட்டதாகவும் விமர்சித்தார். இந்த பட்ஜெட் குறித்து முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் திமுக திட்டங்களின் மீது வெற்றி என்ற லேப்ளை ஒட்டினால் வேலை முடிந்து விட்டதாக தமிழக வெற்றிக்கழக அரசு நினைக்கிறது என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
Tags :


















