9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கன மழை பெய்யக்கூடும்.

by Admin / 25-01-2026 09:54:34am
 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கன மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி ,விழுப்புரம் ,கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கன மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிகுடல் பகுதிகளில் சூரவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் . 25 இல் இருந்து 28ஆம் தேதி வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via