இந்தோனேசியாவின் சுலவேசி தீவில்51,200 ஆண்டுகள் பழமையான ஓவியம்

by Admin / 25-01-2026 11:02:23am
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில்51,200 ஆண்டுகள் பழமையான ஓவியம்

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள லியாங் கருவாரு குகையில் கண்டறியப்பட்ட  ஓவியம், இது சுமார் 51,200 ஆண்டுகள் பழமையானது என்று தற்போதைய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.இது ஒரு காட்டுப்பன்றி மற்றும் மூன்று மனித உருவங்கள் வேட்டையாடுவது போன்ற காட்சியைச் சித்தரிக்கிறது.இது வெறும் கைரேகை மட்டுமல்ல, ஒரு கதையைச் சொல்லும் உலகின் மிகப்பழமையான கதைசொல்லும் பாறை ஓவியமாகஅங்கீகரிக்கப்பட்டுள்ளது.லேசர் முறையைப் பயன்படுத்திஇந்த ஓவியத்தின் வயது துல்லியமாக கணக்கிடப்பட்டது .இதற்கு முன்பு 45,500 ஆண்டுகள் பழமையான ஓவியமே மிகப்பழமையானதாகக் கருதப்பட்டது. தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த 51,200 ஆண்டுகள் பழமையான ஓவியம் மனித நாகரிகத்தின் கலை வரலாற்றைத் தள்ளிப்போட்டுள்ளது.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில்51,200 ஆண்டுகள் பழமையான ஓவியம்
 

Tags :

Share via