மவுனம் கலைத்தார் மல்லிகார்ஜுன கார்கே

by Staff / 27-01-2024 05:52:45pm
மவுனம் கலைத்தார் மல்லிகார்ஜுன கார்கே

இந்தியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தற்போது மௌனம் கலைத்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைவரையும் ஒன்றிணைப்பதே எங்கள் முயற்சி. நான் மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவ், சீதாராம் யெச்சூரி ஆகியோரிடம் பேசினேன். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தினேன். ஜனநாயகத்தை காப்பாற்றுவதில் ஆர்வம் உள்ளவர்கள் மனம் மாற மாட்டார்கள், எங்களுடன் இருப்பார்கள். இண்டியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

 

Tags :

Share via

More stories