இன்று முதலமைச்சர் விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட்தாக்கல்
இன்று முதலமைச்சர் விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட்டை காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். மறுநாள் வேளாண்மை உழவர் நலத்துறை தனி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் தமிழக வெற்றிக்கழகத் தேர்தல் வாக்குறுதியின் படி மகள் இருக்கு மாதம்தோறும் உரிமைத் தொகையாக 20500 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாநில உள்கட்டமைப்பு வசதி உருவாக்கும் பொருட்டு வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டம் எனும் திட்டம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மூலம் இளைஞர்களுக்கான கல்வி வேலை வாய்ப்பு அறிவு சார் மையங்கள் அமைப்பது குறித்த அறிவிப்பும் மாணவர்களின் உயர்கல்விக்காக ரூபாய் 7.5 லட்சம் வரை பிணை இல்லா கல்விக் கடன் வழங்கும் திட்டமும் அறிவிக்கப்படலாம். பட்ஜெட் கூட்டத் தொடர் எத்தனை நாள் நடைபெற உள்ளது. மானிய கோரிக்கைகள் குறித்த விவாத நாட்கள் பட்ஜெட் தாக்களுக்கு பின் நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திற்கு பின்பு சட்டப்பேரவை தலைவர் அறிவிப்பார்.
Tags :













.jpg)




