தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
சென்னை
செங்கல்பட்டு
விழுப்புரம்
திருவண்ணாமலை
கடலூர்
திருச்சிராப்பள்ளி
கரூர்
உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் அந்த சமயத்தில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசப்படும் என்றும் தமிழக மாவட்டங்களில் மட்டும் இன்றி புதுச்சேரி பகுதியிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் மற்ற தமிழக பகுதிகள் மற்றும் காரைக்காலில் ஒரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று விடிய விடிய மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
Tags :















.jpg)


