டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே தொகுதிப் பங்கீடு

by Staff / 22-02-2024 01:07:01pm
டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே தொகுதிப் பங்கீடு

2024 மக்களவைத் தேர்தலையொட்டி, டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு உறுதியாகியுள்ளது. டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் ஆம் ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணியில் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, இடதுசாரிகள், என்சிபி சரத்பவார், சிவசேனா யுடிபி, ஆர்ஜேடி உள்ளிட்ட 28 கட்சிகள் உள்ளன. பல்வேறு மாநிலங்களில் பிரதான கட்சிகள் காங்கிரஸுக்கு தொகுதிகளை பங்கீடு செய்து வருகின்றன. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதற்கு ஏற்றபடி தொகுதிப் பங்கீடு செய்யப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo