பாஜகவில் சேரமாட்டேன்; காங்கிரஸிலும் தொடரமாட்டேன் - அமரிந்தர் சிங்

பாஜகவில் சேரமாட்டேன்; அதேபோல காங்கிரஸ் கட்சியிலும் நீடிக்க மாட்டேன் என பஞ்சாப் மாநில முன்னாள் முதல் அமைச்சர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த அமரிந்தர் சிங் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது கட்சிக்குள் மட்டுமின்றி, அம்மாநில அரசியலிலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய ராஜினாமாவுக்கு நவ்ஜோத் சிங் சித்துதான் காரணம் என அவர் தெரிவித்திருந்தார். இதனிடையே நவ்ஜோத் சிங் சித்து, அம்மாநில அமைச்சர் ஒருவர் என தொடர்ந்து ராஜினாமாக்கள் அரங்கேறின. இது காங்கிரஸில் இருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
இதனிடையே முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரிந்தர் சிங் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதேபோல இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் நேரில் சந்தித்துப் பேசினார். இது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அமரிந்தர் சிங், ''நான் இந்த நிமிடம் வரை காங்கிரஸில் தான் இருக்கிறேன். ஆனால் தொடரமாட்டேன். கட்சியில் தொடர்ந்து நீடிக்கும் வகையில் உரிய மரியாதையை கட்சி எனக்கு வழங்கவில்லை. அதேபோல நான் பா.ஜ.கவிலும் இணைய மாட்டேன்'' என தெரிவித்துள்ளார்.ர்.
Tags :