.ஜப்பானில் வடக்கு ஹொக்காயிடோ பகுதியில் இன்று அதிகாலை மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 6.7 ரிக்கர் அளவு
நிலநடுக்கம் சுனாமி தொடர்ந்து தாக்கும் ஒரு நாடாக ஜப்பான் உள்ளது .ஜப்பானில் வடக்கு ஹொக்காயிடோ பகுதியில் இன்று அதிகாலை மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சமீப நாட்களில் அப்பகுதியை தாக்கிய தொடர்ச்சியான நிலநடுக்கங்களின் ஒரு பகுதியாகும். இந்த நிலநடுக்கம் ஆரம்பத்தில் 6.5 லிட்டர் அளவில் பதிவானது என்றும் பின்னர் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் 6.7 ரிக்கர் அளவு என அறிவித்தது. ஆமோரி மாகாண கடற்கரைக்கு அப்பால் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து வடக்கு பசிபிக் கடலோர பகுதிகளுக்கு ஒரு மீட்டர் அதாவது மூணு அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழக்கூடும் என்று சுனாமி எச்சரிக்கையை அங்குள்ள வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நில நடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பெரிய அளவிலான சொத்து சேதங்களோ நிகழ்ந்ததாக தகவல் இல்லை. இருப்பினும் கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
Tags :


















