தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் -ஓ .பன்னீர்செல்வம்
அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. இதில் மதுரை தேனி ஃபுல் லிட்டர் தென் மாவட்டங்களைச் சேர்ந்த விருப்ப மனுதாரர்களிடம் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.. அண்மையில், திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கோடி நாயக்கர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தார். வேட்பாளர்களை போலவே அவரும் என்ற நேர்காணலில் பங்கேற்ற முதலமைச்சர் மு. க .ஸ்டாலினை சந்தித்தார் இன்று காலை தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் மாலை மதுரை ,தேனி,, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெற்றது. நேர்காணலுக்கு பிறகு செய்தியாளரிடம் பேசிய ஓ .பன்னீர்செல்வம் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்றும் அதிமுக என்ற கட்சி இப்போது இல்லை என்று விமர்சித்தார். ஓ.பி.எஸ் உடன் தி.மு.க.வில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், எம். பி. அன்வர் ராஜா ஆகியோரும் இந்த நிகழ்வின் போது உடன் இருந்தனர். ஓ.பி.எஸ் .மகன் ஓ.பி ரவீந்திரநாத் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட விருப்ப மனுஅளித்திருந்தார்.
Tags :



















